சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்திலிருந்து எஸ்ஜே சூர்யாவின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இன்று எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் அவர் நடித்து வரும் படங்களில் இருந்து அவரின் ஸ்பெஷல் அப்டேட்களையும் வெளியிட்டுள்ளனர்.
எஸ்ஜே சூர்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு டான் படத்திலிருந்து எஸ்ஜே சூர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எஸ்ஜே சூர்யா டான் படத்தில் பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவரது எக்ஸ்குளூசிவ் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் அவர் டான் படத்தின் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகத் தெரிகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சூரி, சிவாங்கி, காளி வெங்கட், முனீஸ்காந்த் உள்ளிட்டோரும் அப்படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனம் படத்தைத் தயாரிக்கின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் வெளியிட உள்ளனர்.
எஸ்ஜே சூர்யா மாநாடு மற்றும் கடமையை செய் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.