2014ல் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கத்தி’. கார்ப்பரேட் அத்துமீறல் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் பிரச்சினையை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் இது. மேலும் தண்ணீரின் தேவையையும் மக்களுக்கு நிரூபிக்கும் வகையில் கதை அமைந்திருந்தது. தளபதி விஜய் அவர்களின் தத்ரூபமான நடிப்பில், படமும் படத்தின் கருத்துக்களும் மக்களின் மனதில் வேரூன்றி நின்றது.
லைக்கா புரொடக்ஷன் தயாரித்த இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்தார், இவருக்கு ஜோடியாக சமந்தா ரூத் பிரபு நடித்திருந்தார். மேலும் நீல் நிதின் முகேஷ், டோட்டா ராய் சவுத்ரி மற்றும் சதீஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்தார்.
பிரம்மாண்ட வெற்றிபெற்ற இந்த படத்தை தெலுங்கில் ‘கைதி நம்பர் 150’ என ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் தெலுங்கு உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் அநேக வரவேற்பை பெற்றது.
தெலுங்கினை தொடர்ந்து தற்போது கத்தி படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை ரீமேக் செய்வதில் போட்டிபோடும் அளவிற்கு படம் பாலிவுட்டில் நிலைத்து நின்றுள்ளது. தற்போது இந்த படத்தை தயாரிப்பதற்கும், படத்தில் தளபதி விஜய் அவர்கள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கும் போட்டிகள் நிலவி வருகின்றன.