V4UMEDIA
HomeNewsKollywood“அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது” நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு!

“அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது” நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு!

“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி என்று நடிகர் விஜய்க்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரி செலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்தி வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கடந்த ஆண்டு அவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அவர் வரி ஏய்ப்பு செய்ததாக எந்தவித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது வழக்குத் தொடரப்பட வில்லை. அவரை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும். இனி எவரும் திரைத்துறையில் இருந்து மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுக்க கூடாது என்பதற்காகவே வரி வருமான வரி சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

சோதனைகளின் போது விஜய் மீது எந்தவித குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்ற போதிலும் பாஜகவின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது அவருக்கு எதிராக பொய்களை கட்டவிழ்த்து விடுவது முழுக்க முழுக்க அரசியல் அதன் வெளிப்பாடே ஆகும்.

பொதுவாக அரசு அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாட மாட்டார்கள் என்பது அடிப்படை உண்மைகளை உணராமல் வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்துக்காக தம்பி விஜயை குற்றவாளி போல சித்தரித்து அவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவது எவ்வகையிலும் நியாயமில்லை. இந்த நாட்டில் வரிவரியாக இருந்தால் தவறில்லை. அது மக்களைச் சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரசின் கருவியாக மாறிவிட்டது. ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி இருப்பதும், அது அனைத்து தரப்பு மக்களையும் கசக்கிப் பிழிவது தான் தவறு என்கிறோம். இது ஏதோ விஜய் என்ற ஒரு மனிதருக்கான பிரச்சனை அல்ல. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பிரச்சினையாக வரிவிதிப்பு முறைகள் இருக்கிறது. அதனால்தான் இந்த நாட்டில் வழிக் கொள்கையின் விதிக்கப்படும் முறையே சரியானது அல்ல அது யாவற்றையும் ஒட்டுமொத்தமாய் மாற்றி ஏழை மக்களை சுரண்டுவதை தடுக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்கிறோம்.

உயிர் காக்கும் மருந்துகள் கூட 16 கோடிக்கு 6 கோடி ரூபாய் வரி என்றால் இந்த நாடு எதை நோக்கி செல்கிறது? விஜய் வரிவிலக்கு சலுகை கேட்டதற்காக பொங்கி தீர்க்கும் பெருமக்கள் பல ஆயிரம் கோடி இன மக்கள் வரிப்பணத்தை வாரி சிக்கிய லலித் மோடியும், விஜய் மல்லையாவின் நாட்டை விட்டு தப்பும் போது என்ன செய்தார்கள் ?அவர்கள் தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்த மோடி அரசு மீது என்ன விமர்சனத்தை வைத்தார் வைத்தார்கள்?

ஆனால் இன்றுவரை பல லட்சம் கோடியாக மக்களின் வரிப்பணம் வாராக் கடனாக வழங்கப்பட்டு ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனி பெரும் முதலாளிகளுக்கும் பெரும் சலுகை வழங்கப்படுகிறது . அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்வி கேட்க வில்லையே ஏன் ?அதை எல்லாம் கண்டும் காணாதது போல இருந்து செயல்பாடுகள் மறைமுகமாக ஆதரவு கொடுத்து விட்டு இப்போது விஜய்யின் வரிவிலக்கு சலுகை கூறும் வழக்குக்கு எதிராக பொங்கி தீர்ப்பதில் எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஆட்சி முறைகளை சாடி திரைப்படங்களில் தம்பி விஜய் கூறிய கருத்துக்கள் தற்போதைய சூழலை பயன்படுத்தி அவரை பழிவாங்க நினைப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாககும். அதனை முறியடிக்கவும் அவதூறு பரப்பும் மறைமுக அழுத்தங்களை எதிர்கொண்டு மீண்டு வரவும் அவருக்கு துணை நிற்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

Most Popular

Recent Comments