V4UMEDIA
HomeNewsKollywood'கோலிசோடா' இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் ஆண்டனி?

‘கோலிசோடா’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் ஆண்டனி?

‘கோலி சோடா’ இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த விஜய் ஆண்டனி தற்போது தேர்ந்த நடிகராகவும் தன்னைத்தானே மெருகேற்றி வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘நான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. மேலும் அந்த படங்களில் விஜய் ஆண்டனியின் நடிப்பு திறமை பலராலும் பாராட்டப்பட்டது. அதையடுத்து அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கோலிசோடா படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த படம் பல ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படமாக உருவாக இருப்பதாகவும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் அந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய் ஆண்டனி தற்போது அக்னிச் சிறகுகள், தமிழரசன், காக்கி, பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் சில படங்கள் அனைத்து படங்களும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன.

Most Popular

Recent Comments