முதல்வா் மு.க.ஸ்டாலின் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். இந்நிலையில், தற்போது முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டாா். முதல்வராகப் பொறுப்பேற்றபின், ஞாயிற்றுக்கிழமை காலை சைக்கிள் பயணம் மேற்கொண்டதால், காவலர்கள் அவரைப் பின்தொடா்ந்து பாதுகாப்புக்காக வந்தனா்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை யாஷிகா, முதல்வரின் சைக்கிள் பயணத்தின்போது அவருடன் அருகில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் யாஷிகா வெளியிட்டுள்ளார்.