நடிகர் ஜெய் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
திரைத்துறை பிரபலங்கள் பெரும்பாலானோர் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அதைத் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது நடிகர் ஜெய் முதல் தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டுள்ளார். அவர் ஸ்புட்னிக்(Sputnik)தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அது நன்கு தெரியுமாறு உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/07/7a0T9Ehc.jpg)
இதற்கிடையில் ஜெய் பிரேக்கிங் நியூஸ், எண்ணித் துணிக என இரண்டு படங்கள் இயக்குனர் சுசீந்திரன் உடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். அதையடுத்து சுந்தர் சியுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அட்லி தயாரிப்பில் உருவாகயிருக்கும் ஒரு படத்திலும் ஜெய் வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.