ஆபாச பேச்சு விடியோக்களை பதிவு செய்து கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மீது கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முஹைதீன் இப்ராஹிம் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் இணையதளம் மூலம் புகார் கொடுத்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/06/E4xsSi7VcAE1-i2-821x1024.jpg)
கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக கீழக்கரை பகுதியைச் சேர்ந்த முஹைதீன் இப்ராஹிம் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2021/06/maxresdefault-1-1024x576.jpg)
மேலும், இதில் முக்கிய நபர்களான ஜி.பி.முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா போன்றோர் ஆபாசமாக பேசி வீடியோக்களை பதிவேற்றம் செய்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுகளும் தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் என்றும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு இதுபோன்ற பதிவுகள் தொடராமல் பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.