வலிமை படத்தின் இன்ட்ரோ பாடல் குறித்து யுவன் ஷங்கர் ராஜா வெளிப்படுத்தியுள்ளார்.
அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை எடுத்து வினோத், அஜித் மற்றும் போனிகபூர் கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்துள்ளனர். அஜித் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மே 1-ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால் மக்கள் அல்லல்படும் இந்த நேரத்தில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று படக்குழுவினர் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். இதனால் வலிமை படத்தின் அப்டேட் வெளியிடுமாறு அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாநாடு படத்திற்காக டுவிட்டரில் ரசிகர்களுடன் பேசிய யுவன் சங்கர் ராஜா வலிமை படத்தில் அம்மா செண்டிமெண்ட் உள்ள ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் வலிமை படத்தின் இன்ட்ரோ பாடல் நாட்டுப்புற ஸ்டைலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.