V4UMEDIA
HomeNewsKollywoodG.V.பிரகாஷ் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும்...

G.V.பிரகாஷ் ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் !

பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஹோமியோபதி மருந்துகளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கினர்.

மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும்,  அதனை நட்டும்  அனைத்து மாவட்டந்தோறும் G.V பிரகாஷ்குமார் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்..

மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கொரோனா வராமல் தடுக்க போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர் அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக அவர்களின் பொற்கரங்களால் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொருட்களையும் வழங்க வைத்து அவர்களை கெளரவப்படுத்தினர்..

தன் பிறந்தநாளை முன்னிட்டு இது போன்ற நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் திரு. G.V பிரகாஷ்குமார் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Most Popular

Recent Comments