V4UMEDIA
HomeNewsKollywoodகொரோனா கால பணிகளுக்கு நிதி திரட்டுகிறார் ராஷி கண்ணா

கொரோனா கால பணிகளுக்கு நிதி திரட்டுகிறார் ராஷி கண்ணா

அரண்மணை 3, துக்ளக் தர்பார், சர்தார், சைத்தான் கே பச்சா படங்களில் நடித்து வருகிறார் ராஷி கண்ணா. இவற்றில் சில படங்கள் முடிந்துவிட்டன. தற்போது கொரோனா பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ராஷி கண்ணா நிதி திரட்டும் பணியில் இறங்கி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்தியா மிக மோசமான மருத்துவ நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பெருந்தொற்று புதுப்புது சவால்களை நம் முன் நிறுத்துகின்றது. இத்தகைய வேளையில், நாம் ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து நம்மால் இயன்ற உதவிகளை மனித குலத்திற்கும், இன்னும் பிற உயிர்களுக்கும் செய்வது சிறந்தது.

கொரோனா பேரிடர் காலம் தொடங்கியது தொட்டே என்னால் முடிந்த பணிகளை செய்து வருகிறேன். பசித்தோருக்கு உணவு வழங்குவதே எனது இலக்காக இருந்தது. இதுபற்றி நான் அதிகம் வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. ஆனால் நற்செயல்களை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் நல் உள்ளம் கொண்ட பலரையும் பெருந்தொற்று நெருக்கடியைக் கடக்க ஏழை, எளிய மக்களுக்கு உதவச் செய்யமுடியும் என்ற நம்பிக்கையில் இப்போது இதனை சொல்கிறேன்.

தற்போது விலங்குகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் அமைப்புகள், முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறேன். இதற்கு எனது மற்றும் எனது குடும்பத்தாரின் பங்களிப்பு நண்பர்கள், நலன் விரும்பிகளின் நிதியுதவி மட்டுமே போதுமானதாக இருக்காது.

பொதுமக்களும் உதவலாம், பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம். நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்.

என்று கூறியுள்ள ராசி கண்ணா கொரோனா காலத்தில் மக்கள் படும் இன்னல்களை ஒரு வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments