V4UMEDIA
HomeNewsKollywoodஆண் குழந்தைக்குத் தாயான ரிச்சா

ஆண் குழந்தைக்குத் தாயான ரிச்சா

சிம்பு கதாநாயகனாக நடித்த ஒஸ்தி, தனுஷ் கதாநாயகனாக நடித்த மயக்கம் என்ன ஆகிய படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய. அந்த இரண்டு படங்களுடன் தமிழ் சினிமாவை விட்டு விலகியவர் அதற்கடுத்த வருடம் சில தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றுவிட்டார்.

அங்கு அமெரிக்கரான ஜோ லாங்கெலா என்பவரை 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தாய்மை அடைந்த ரிச்சாவிற்கு கடந்த மே மாதம் 27ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

தன்னுடைய குழந்தை புகைப்படங்களை வெளியிட்டு குழந்தையின் பெயர் லுகா ஷான் லாங்கெலா என்றும் அறிவித்துள்ளார் ரிச்சா.

Most Popular

Recent Comments