V4UMEDIA
HomeNewsKollywoodபழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் (90) மாரடைப்பால் சென்னையில் காலமானார் .

பழம்பெரும் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் (90) மாரடைப்பால் சென்னையில் காலமானார் .

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‛‛கல்யாணராமன், மீண்டும் கோகிலா, கடல் மீன்கள், மகராசன்” போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன்(91) இன்று(ஜூன் 3) காலை 8.45 மணி அளவில் மாரடைப்பினால் காலமானார். இவருக்கு சக்குபாய் என்ற மனைவியும், குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

மகன் ஜி.என்.ஆர்.குமாரவேலன், தமிழில் பிரபல இயக்குனர் ஆவார். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கி உள்ளார்.

தற்போது அருண் விஜய்யை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார். மறைந்த ஜி.என்.ரங்கராஜன் இறுதிச்சடங்கு சென்னை, நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.

Most Popular

Recent Comments