சமீபத்தில் வைரலாகி வரும் பேஸ்ஆப் மூலம், மக்கள் தற்போது அவர்களது வயதான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரிஷி கபூர் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரது தந்தை ராஜ் கபூரின் 1970 ஆம் ஆண்டு வெளியான மேரா நாம் ஜோக்கர் (1970) திரைப்படத்தில் குழந்தை கலைஞராக அறிமுகமானதற்காக தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். இவரது த்ரோபேக் Vs லேடஸ்ட் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நீது கபூர்.
இதை இவரின் மனைவி இந்த படத்தை பகிர்ந்து, ” இதன் மூலம் பேஸ்ஆப் மிகவும் மிகைப்படுத்தி காண்பிக்கிறது” என்று தலைப்பிட்டுளார். ரிஷி கபூர் மற்றும் நீது கபூர் ஆகியோர் தற்போது நியூயார்க்கில் உள்ளனர்.
ரிஷி கபூர் அங்கு புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். ஃபேஸ்ஆப் செல்பி மூலம் இணையத்தில் வைரல் ஆவதால், பாலிவுட் நட்சத்திரங்களும் இதை பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்ஆப் சேலஞ்சின் ஒரு பகுதியாக, நடிகர்கள் தங்களது பழைய படங்களை வெளியிடுகிறார்கள். ஃபேஸ்ஆப் பல நட்சத்திரங்களின் புகைப்படத்தை காண்பித்திருக்கலாம், ஆனால் நீது கபூர் சற்று வித்தியாசமாக இளம் பருவத்தை பகிர்ந்துள்ளார். 61 வயதான நடிகை தனது அறிக்கையை ஆதரிக்க ஒரு ஆதாரத்தை கூட வழங்கினார். புதன்கிழமை, நீது கபூர் தனது நடிகர் கணவர் ரிஷி கபூரின் குழந்தை பருவ நாட்களின் ஒரு த்ரோபேக் படத்தை வெளியிட்டு, நடிகரின் சமீபத்திய புகைப்படத்துடன் அதை காண்பித்தார். அவர் அதில் தலைப்பிட்டார்: “இந்த படத்தை ஃபேஸ்ஆப் மிகவும் மிகைப்படுத்தப்பட்டதாக நிரூபிக்கிறது.”
https://www.instagram.com/p/B0TU2sKg4T9/?utm_source=ig_web_copy_link
கபூர் குலத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர, ரிஷி கபூர் மற்றும் நீது கபூர் ஆகியோரை அமீர்கான், ஷாருக் கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் நேரில் சென்று பார்த்தனர். ரிஷி கபூர் மற்றும் நீது கபூர் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தனர். இந்த ஜோடி விரைவில் மும்பைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.