பழம்பெரும் நடிகர் சரத்குமாருடன் கைகோர்க்கிறார் நடிகர் சசிகுமார், “நா நா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் நிர்மல் குமார் இயக்குகிறார். இந்த ஆண்டு வெளியான ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தை தயாரித்த கல்பட்டு பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
படத்தின் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிருக்கின்றனர். முதல் தோற்றத்தில் முன்னணி நடிகர்கள் நடித்ததோடு நிறைய சூழ்ச்சி செய்கிறார்கள் என்பது போல அமைந்துள்ளது. சலீம் படத்திற்கு பிறகு என். வி. நிர்மல் குமாரின் மூன்றாவது இயக்கத்தில் இந்த படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகப்படவுள்ளது.
இந்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சசிகுமார். அடுத்து சுசீந்திரன் இயக்கிய கென்னடி கிளப்பில், ‘ சுந்தரபாண்டியன் ‘ இயக்குனர் சோ. ப. பிரபாகரனின் ‘கொம்பு வச்ச சிங்கம்படா’ படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார்