வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதி, சூரி
இந்நிலையில், விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூரிக்கு அப்பாவாக நடிக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் அப்பா வேடத்தில், முதலில் இயக்குனர #பாரதிராஜா நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் விலகியதால் விஜய் சேதுபதி ஒப்பந்தமானார். நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’, சீதக்காதி போன்ற படங்களில் வயதானவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.