மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் தற்போது துரதிருஷ்டவசமாக தனது ‘ஆடுஜீவிதம்’ படக்குழுவினர் 58 பேருடன் ஜார்டனில் சிக்கியுள்ளார். அதையடுத்து அவர், தனக்கும் 58 உறுப்பினர்களைக் கொண்ட அவரது குழுவினருக்கும் வீட்டிற்கு வர உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தங்களின் நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். அவரும் அவரது குழுவினரும் நன்றாகவும், தவறாமல் குழு மருத்துவர் மற்றும் ஜோர்டான் அரசாங்க மருத்துவர்களால் சோதிக்கப்படுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் “நிலைமை காரணமாக படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உடனடி அனுமதி சாத்தியமில்லை என்று எங்களுக்கு இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே, எங்கள் அடுத்த சிறந்த விருப்பம், கிடைக்கக்கூடிய முதல் வாய்ப்பில் இந்தியாவுக்கு திரும்புவதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.