கொரோனா வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியர்களே, கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள். மக்களை காக்க தங்களால் முயன்ற நிதி அளியுங்கள்” என ட்வீட் செய்திருந்தார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர், சினிமா பிரபலங்கள் என பலரும் கோரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்து சொல்கின்றனர். சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தெறி, வடசென்னை போன்ற பல படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா உதவி செய்துள்ளார். தனது சொந்த செலவில் L.F.E.அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை 250 குடும்பங்களுக்கு கொடுத்து உதவியுள்ளார் சாய் தீனா
.