
சிம்புவும் ஹன்சிகாவும் முதன்முதலில் 2015 இல் வெளியான ‘வாலு’ படத்தில் ஒன்றாக நடித்தனர், அடுத்ததாக சிம்பு ஹன்சிகா ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் இணைந்திருக்க வேண்டும், ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு, சிம்பு ஹன்சிகாவுடன் ‘மஹா’ படத்தில் ஒரு நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடித்துள்ளார். இதில் ஹன்சிகாவுடன் ஸ்ரீகாந்ந் மற்றொரு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘மஹா’ படத்திலிருந்து சிம்பு மற்றும் ஹன்சிகாவின் ரொமான்டிக் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகின, சமீபத்தில் இப்படத்திலிருந்து சிம்புவின் ஒரு ஸ்டைலான விமானப்படை அதிகாரியாக இருக்கும் ஒரு போஸ்டரும் இணையத்தில் வைரலானது. தற்போது சிம்பு ஹன்சிகா கட்டி அணைத்து நிற்கும் ஒரு ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.