இயக்குனர் செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இருவரும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் அறிந்ததே. செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் ‘திருடன் போலீஸ்’. 2006ம் ஆண்டு புதுப்பேட்டை படத்துக்கு பின், இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. இப்படத்தை தனுஷின் சகோதரி விமலா கீதா அவர்கள் RK ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளிலே தவிர்க்க முடியாத சில காரணங்களால் கைவிட்டப்பட்டது.
இந்நிலையில், டிராப்பான “திருடன் போலீஸ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தை தற்போது எடுத்தால் தனுஷ் சினிமா பயணத்தில் தரமான சம்பவமாக இருக்கும் என தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் தங்களுது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
#ThirudanPolice (Dropped Movie after #Pudhupettai Time )
Dir – Dop – Aravind Krishna
Music @thisisysr @dhanushkraja> <
br>planned to produce by D sir sister @vg_vimala . pic.twitter.com/mEoKlcx887— DHANUSH CHOW3 (@dhanush_chow3) March 30, 2020