V4UMEDIA
HomeNewsKollywoodசத்தமில்லாமல் மக்களுக்கு உதவி செய்து வரும் சந்தானம்!

சத்தமில்லாமல் மக்களுக்கு உதவி செய்து வரும் சந்தானம்!

தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரம் நடிகர் சந்தானம். இவர் மக்களுக்கு பேரிடர் காலங்களில் எப்போதும் துணையாக நின்று பல உதவிகளை செய்து வருவார்.

அதேபோல் கொரோனா பீதியில் உலகமே உறைந்துபோய் உள்ள நிலையில் சந்தானம் தன் தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவுத்தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக செய்து வருகிறார்.

மேலும் கொரொனா நிவாரணப்பணிகளுக்கு தன்னால் முடிந்தவரை மக்கள் பணியை செய்து வருகிறார். இதில் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பால், காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்கள், கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம் என தேவையான அனைத்தும் சந்தானம் தன் ரசிகர் மன்றம் மூலம் செய்து வருகிறார். 

Most Popular

Recent Comments