
கொரோனா ஊரடங்கில் மக்களின் பொழுதுபோக்கிற்காக சன் டிவி ஒரு புதிய யுத்தியை எடுத்துள்ளது என்னவென்றால், தொடர்ச்சியாக 5 படங்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கத்திசண்டை’, 12 மணிக்கு ‘ரமணா’, 3 மணிக்கு ‘மீசைய முறுக்கு’, 6,30 மணிக்கு ‘சீமராஜா’ மற்றும் 9.30 மணிக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
ஏப்ரல் 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு ‘கலகலப்பு 2’, 12.30 மணிக்கு ‘காப்பான்’, 3.30 மணிக்கு ‘டகால்டி’, 6.30 மணிக்கு ‘தர்பார்’ மற்றும் இரவு 9.30 மணிக்கு ‘நண்பேன்டா’ ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. சன் டிவி தொடங்கி 27 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இந்தச் சிறப்புக் கொண்டாட்டத்தை முடிவு செய்துள்ளது.