மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர் பத்மகுமார் ஆவார். சமீபத்தில் இவர் மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து மாமாங்கம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
பத்மகுமார் அவர்களின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் பாரிஸில் உள்ள யூனிவர்சிட்டியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இவர்கள் மார்ச் 15ஆம் தேதி கேரளா திரும்பினர். பாரிஸில் இருந்து திரும்பிய 14 நாட்கள் இவர்கள் இருவரும் சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருந்தனர். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் சோதனை செய்து பார்த்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது . இவர்கள் களமசேரி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளனர்.
மேலும் இயக்குனர் பத்மகுமார் முதலமைச்சர் திரு. பினாய் விஜயன் அவர்களுக்கும் , சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி ஷைலஜா அவர்களுக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் இது நன்றி மட்டுமல்ல எனது நாட்டின் பெருமை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். எல்லா நாடுகளை விடவும் கேரளாவில் அதிக கவனம் செலுத்தப் படுவதாகவும், அதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.