V4UMEDIA
HomeNewsKollywoodகாடன் படத்தின் கதை இது தானா ?

காடன் படத்தின் கதை இது தானா ?

கொக்கி, மைனா, கயல் என பல தரமான படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் தற்போது ராணா டாகுபதி – விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள “காடன்” படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிர்ந்து கொண்டார்.

தொடரி படத்துக்கு பிறகு 2 வருஷம் கடினமாக உழைத்துள்ளேன் காடன் படத்திற்காக. கும்கி படம் எடுக்க தொடங்கிய காலகட்டத்திலேயே ஆய்வு செய்ய தொடங்கிவிட்டேன். “அசாம் பகுதியில் உள்ள காசிரங்கா என்ற வனப்பகுதியில் 450 ஹெக்டரே ஏக்கர் இடத்தை சுற்றி வளைத்து “ரைனோ பார்க்” என்ற டவுன்ஷிப் பை உருவாக்கியபோது காட்டின் நடுவே 6 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்புப்சுவர் எழுப்பப்படுகிறது. அந்த தடுப்புச் சுவரால் தன் தாத்தன் பாட்டன் காலத்திலிருந்து மியான்மார், பர்மா வழியாக அஸ்முக்கு யானைகள் பயணித்து வரும் போக்குவரத்து தொடர் பாதிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் யானைகள் வழியின்றி தவிக்கின்றனர். இதில் சில யானைகள் தடுப்புச்சுவரை உடைக்க முற்பட்டு இறந்து போகின்றன. இப்படி அனாதைகளாக ஆக்கப்பட்ட யானைகளை மீட்டு ஒரு தனி மனிதன் போராடி எப்படி அவர்களது வழித்தடத்தை மீட்டுக் கொடுக்கிறான் என்பது தான் “காடன்” படத்தின் கதை

Most Popular

Recent Comments