கடந்த சில நாட்களுக்கு முன், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை கோவிலை பற்றி கருத்து தெரிவித்தார். “கோயிலுக்காக அதிகம் காசு செலவு செய்கிறார்கள். தயவு செய்து அந்த பணத்தை பள்ளிகளுக்கு மற்றும் மருத்துவமனைகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம்” என கூறினார். நடிகை ஜோதிகா கூறிய கருத்துக்கு ரசிகர்களும், பொது மக்களும் சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி, ஜோதிகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கின. இதை உடனடியாக நடிகர் விஜய்சேதுபதி மறுத்துள்ளார். இது போலியானது என ட்வீட் செய்துள்ளார்.
Fake ❌ pic.twitter.com/WR5vhXsXg7— VijaySethupathi (@VijaySethuOffl) April 24, 2020
















