கொரோனா வைரஸ் காரணமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பெரிதும் பாதிக்கப்படுவது, தினசரி வேலைக்கு செல்லும் தொழிலர்கள் தான். வேலை இல்லாத காரணத்தால் பல குடும்பங்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளையும், நிவாரண பொருட்களையும் வழங்கி மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடியன் இமான் அண்ணாச்சி அவர்கள் தானே பிரியாணி செய்து, சென்னையில் சாலையோரத்தில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கி வருகிறார். இமான் அண்ணாச்சி க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.