தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீரியல் மற்றும் படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், தினசரி வருவாயை நம்பி இருக்கும் சினிமா தொழிலர்களுக்கு உதவுமாறு செல்வமணி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இது போன்ற இக்கட்டான நிலையில் எப்போதும் முதல் ஆளாக உதவ கூடியவர் தளபதி விஜய். ஆனால் அவரது மௌனம் பலருக்கு புரியவில்லை.
இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக 1.30 கோடி வழங்கியுள்ளார் . இது தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவுவதற்காக தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு தொகை விநியோகிக்கப்படுகிறது.
- தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சம்
- பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம்
- கேரளாவுக்கு ரூ.10 லட்சம்
*கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி