V4UMEDIA
HomeNewsBollywoodஇதயம் நொறுங்கியது ! நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் !

இதயம் நொறுங்கியது ! நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் !

பாலிவுட் சினிமாவில் 80களின் மிகப்பெரும் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரிஷி கபூர். உடல்நல குறைவால் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் (வயது 67) காலமானார். அவரது இறப்பினால் பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

நேற்று பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல் நலக்குறைவால் காலமானார். அடுத்தடுத்து இரண்டு பிரபல பாலிவுட் நடிகர்கள் இறந்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் “என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

Heartbroken … Rest In Peace … my dearest friend #RishiKapoor— Rajinikanth (@rajinikanth) April 30, 2020

Most Popular

Recent Comments