இர்பான் கான் 1988ம் ஆண்டு தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
2011-ல் “பான் சிங் தோமர்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். 2017-ல் வெளியான “ஹிந்தி மீடியம்” படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது.
2018-ல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் இர்பான் கான். லண்டனில் இதற்காக தீவிர சிகிச்சை மேற்கொண்டார். வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் இர்பான் கானின் தாய் காலமனார். அவரது தாயார் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக அதில் இர்பான் கானால் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இர்பான் கான் இன்று காலமானார். இர்பான் கானின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். V4U Media சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.























