V4UMEDIA
HomeNewsஇந்திய தேசமே விரும்பிய படம் "பாகுபலி 2" - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ்...

இந்திய தேசமே விரும்பிய படம் “பாகுபலி 2” – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபாஸ் !

பாகுபலி-2 திரைப்படம் வெளிவந்து இன்றுடன் மூன்று ஆண்டு நிறைவடைகிறது. நடிகர் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், அனுஷ்கா நடிப்பில் உலகமெங்கும் அசுர ஹிட் அடித்தது.

‘பாகுபலி 2’ நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட. மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன். பாகுபலி தமிழகத்திலும் பெரும் வசூலை வாரி குவித்தது. தமிழகத்தில் “பாகுபலி 2” வசூல் மற்றும் விநியோகஸ்தர் ஷேர் என இரண்டு சாதனையையும் முறியடித்த முதல் படம் தளபதி விஜய் யின் பிகில் என குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments