விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமீபத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உலகளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். சென்னை INOX திரையரங்கில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்துக்கு பின் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையும் VTV படத்திற்கு உண்டு. தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டார். இப்படத்தில் நடித்த த்ரிஷா வின் ஜெஸ்சி கேரக்டர் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் நேற்று குறும்பட டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகை த்ரிஷா. ரசிகர்களிடையே வைரலாக பரவியது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்தை போல இந்த டீசர் உள்ளது. சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என பல ஓ.டி.டி தளங்கள் (OTT) இருக்கின்றன என த்ரிஷா போனில் கார்த்திக்கு சொல்வது போல இந்த டீசர் அமைந்துள்ளது.
இதனால், கார்த்திக் யார் ? த்ரிஷா டயல் செய்த நம்பர் என்ன ? சிம்பு இந்த ஷார்ட் பிலிமில் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.