லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” மற்றும் “வாத்தி கம்மிங்” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். உலகம் முழுவதும் வாத்தி கம்மிங் பாடலை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தளபதி விஜய் யிடம் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்
“எனது நண்பர் விஜய் மற்றும் அனிருத் அவர்களுக்கு, இவர் தான் தான்சேன். எனது மாற்றுத் திறனாளி குழுவில் இருப்பவர். காஞ்சனா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த ஊரடங்கு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பயிற்சி செய்து ‘மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங்’ பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், தளபதி விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான். தயவு செய்து இந்த லிங்க்கைப் பாருங்கள். இவரது கனவு நனவாக வேண்டும் என்று விரும்புகிறேன்” என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
My request to nanban Vijay and Anirudh sir @actorvijay @anirudhofficial
Please see the link below https://t.co/xYzzoHJrom pic.twitter.com/mMLaigZ0za— Raghava Lawrence (@offl_Lawrence) May 9, 2020