லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி வரை பெரிய ரீச். குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ‘வாத்தி கம்மிங்’ பாடலை வசித்த மாற்றுத்திறனாளி ஒருவரின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பகிர்ந்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல் வெறும் மூன்று நாட்களில் பயிற்சி பெற்று வசித்துள்ள அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Mindblown ! Just pure amazing talent 😍🏆🙏🏻 God bless you brother! #VaathiComing pic.twitter.com/QK5gulR5eG— Anirudh Ravichander (@anirudhofficial) May 8, 2020