தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக். திரைப்படங்களில் போலவே சமூக வலைத்தளங்கள் மூலமும் ரசிகர்களுக்கு கருத்து சொல்லி வந்தார். ரசிகர்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவார். 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தினை பாலோ செய்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி ட்விட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார் நடிகர் விவேக். 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் ட்விட்டர் வந்துள்ளார் நடிகர் விவேக். மாஸ்டர் படத்தில் வரும் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடிகர் விவேக் நடன அசைவு கொடுத்து ஆடுவதைப் போன்று உருவாக்கப்பட்ட மீம் பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது மட்டுமின்றி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் அந்நியன் விக்ரம் போன்று ஒரு காட்சியில் நடித்துள்ளார். டெலிட் செய்த காட்சியை பகிர்ந்துள்ளார். அந்த காட்சி தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.