2010ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா, VTV கணேஷ் நடிப்பில் வெளிவந்து இளைஞர்களின் மனம்கவர்ந்த படமாக நீங்கா இடம் பிடித்தது “விண்ணைத்தாண்டி வருவாயா”.
VTV படத்தின் தொடர்ச்சியாக “கார்த்திக் டயல் செய்த எண்” என்னும் குறும்படத்தை இயக்குவதாக கவுதம் மேனன் மற்றும் திரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இக்குறும்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறாரா ? இல்லையா ? என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. தற்போது அனைவரும் எதிர்பார்த்த இக்குறும்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டுள்ளார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக வரும் இக் குறும்படத்தில் கார்த்திக் (சிம்பு), ஜெஸ்சி (திரிஷா) இருவரும் வீட்டில் இருந்தபடியே தொலைபேசியில் பேசிக்கொள்வது போல் படமாக்கப்பட்டுள்ளது.
கதை எழுத முடியாமல் தவிக்கும் சிம்பு, திரிஷாவிடம் மனம்விட்டு பேச முயற்சி செய்கிறார். இவர்களின் அழகான போன் உரையாடல் தான் இந்த குறும்படத்தின் கதை. 12 நிமிட குறும்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கார்த்திக் டயல் செய்த எண்..
Karthik dial seytha yenn…https://t.co/ghbjdS9n3g
So very thankful to the names involved in this effort and especially amidst these testing times.
There’s hope, there is love and there’s a beautiful future. Love to all!— Gauthamvasudevmenon (@menongautham) May 20, 2020