V4UMEDIA
HomeNewsKollywoodரிலீஸிற்கு முன்பே 120 கோடி ஈட்டிய கே.ஜி.எப்-2 ! தசரா விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு...

ரிலீஸிற்கு முன்பே 120 கோடி ஈட்டிய கே.ஜி.எப்-2 ! தசரா விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு !

யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கிய (KGF) கே.ஜி.எப் திரைப்படம் கன்னட திரை உலகின் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்துள்ளது. கன்னட மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. கேஜிஎப்-இன் திரைக்கதை உருவாக்கமும் , படமாக்கிய விதமும் கன்னட திரையுலகிற்கு புதியதாக அமைந்தது. இரண்டாவது பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 23ஆம் தேதி தசராவை முன்னிட்டு கேஜிஎப் 2-ஐ உலகம் முழுவதும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு வருவதற்கு சில மாதங்கள் கண்டிப்பாக ஆகும். எனவே பெரிய படங்கள் அனைத்துமே தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகளை முன்னிட்டே வெளியாகும். கேஜிஎப் 2 படக்குழுவும், தசரா பண்டிகையைக் குறிவைத்துக் களமிறங்குகிறது. விறுவிறுப்பாக போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்ததும் மீதமுள்ள காட்சிகளை விரைவில் படமாக்க படகுழுவினர் முடிவு செய்துள்ளனர். கே.ஜி.எப்-2 படத்தின் ஒளிபரப்பு உரிமை மட்டுமே 120 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular

Recent Comments