ஏவிஎம் தயாரிப்பில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ’முந்தானை முடிச்சு’. சினிமாக்களில்‘எப்பவேணாலும் பாக்கலாம், எத்தனை தடவை வேணாலும் பாக்கலாம்’ அப்படீன்னு ரசிகர்கள் இன்றைக்கும் கொண்டாடுகிற படங்களில், ‘முந்தானை முடிச்சு’க்கு தனியிடம் உண்டு!
இந்தப் படத்தின் கதைக்காக திருப்பதியில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்யப்பட்டது. அந்த டிஸ்கஷனில் எழுத்தாளர் பாலகுமாரனும் கலந்துகொண்டு, பணியாற்றினார். தனது முன்கதைச்சுருக்கம் எனும் பயாகிரபி நூலில், இதைக் குறிப்பிட்டிருக்கிறார் பாலகுமாரன்.
அடுத்து… இந்தக் கதைக்கு சின்னவீடு என்று டைட்டில் சொன்னார் பாக்யராஜ். ‘கதை நல்லாருக்கு. டைட்டிலும் நல்லாருக்கு. வேற ஏதாவது சொல்லுங்களேன்’ என்றது ஏவிஎம். ‘அடுத்தாப்ல ஒரு சொந்தப்படம் எடுக்கறேன். அந்தப் படத்துக்கு ஒரு டைட்டில் வைச்சிருக்கேன். அதைத்தரேன்’னு பாக்யராஜ் சொல்ல… அதுதான் ’முந்தானை முடிச்சு’. பிரமாதம் என்று ஏற்கப்பட்டது.
இந்த படத்தின் முருங்கைக்காய் வசனம் 37 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை புகழ் பெற்று நிற்பது பாக்கியராஜின் வெற்றிக்கு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந் நிலையில் இந்த படத்தின் ரீமேக்கை கே.பாக்யராஜ் உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. புது ’முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்தில் பாக்கியராஜ் உடன் பிரபல ஹீரோ சசிகுமார் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது !