லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச். இந்நிலையில் இப்பாடலுக்கு 100 மருத்துவர்கள் சேர்ந்து நடனமாடிய வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உயிரை கொள்ளும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் தெய்வமாக பார்க்கப்படும் மருத்துவர்கள் பணி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மோட்டிவேஷனல்` பாடலுக்கு நடனமாடியிருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.
100 tamilnadu doctors dancing to the #Master movie song #KuttyStory #bethehope #Thalapathy #Lockdown4 @boxofcine pic.twitter.com/1OQZRyhQcj— BOC (@boxofcine) May 17, 2020