லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, தனது ரசிகர்களுடன் நெய்வேலியில் தளபதி விஜய் ஒரு செல்பி எடுத்து கொண்டார். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த செல்பி தற்போது 1 லட்சம் RT யை கடந்துள்ளது.
இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் சினிமா தாண்டிய ஒரு பெர்சனல் புகைப்படம் இவ்வளவு RT ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றே கூறலாம். இந்தியாவில் இந்த சாதனையை படைத்த முதல் நபர் தளபதி விஜய் தான். அவரது ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை #100KRTsForThalapathySelfie என ட்வீட் செய்து உலகளவில் கொண்டாடி வருகின்றனர்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl— Vijay (@actorvijay) February 10, 2020