பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி ‘பாகுபலி 1&2’ படத்துக்குப் பின் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் (ரவுத்திரம் ரணம் ருத்திரம்) என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை தமன்னா இல்லையா? என ரசிகர்களின் கேள்விக்கு விடை அளித்துள்ளார் இயக்குனர் ராஜமௌலி. அவர், “ஆர் ஆர் ஆர்” படத்தில், தமன்னாவுக்காக ஒரு சண்டை காட்சி உள்ளது. இந்த சண்டை காட்சி தமன்னா படத்தில் நடிக்க வேண்டும் எனபதற்காக வேண்டுமென்றே திணிக்கப்படவில்லை. படத்தின் கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது’ என்று அழுத்தமாக கூறியுள்ளனர்.