மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குநர் நவீன், நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் வைத்து ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். விஜய் ஆண்டனி தன்னுடைய சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை தயாரிப்பாளர்களின் நலனுக்காக குறைத்துக் கொண்டது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் மேலும் ரஷ்யாவில் 20 டிகிரி கடும் குளிரை பொறுத்துக்கொண்டு எந்தவித குறையும் சொல்லாமல் அவர் நடித்துக் கொடுத்தது மற்றும் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட ஒப்புக் கொண்டது தான் மிக பெரிய விஷயம் என்று விஜய் ஆண்டனியை தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார் இயக்குனர் நவீன்.
அக்னிச் சிறகுகள் படத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்து, ரஷ்யா, பராகுவே உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் நவீன் ஸ்விட்சர்லாந்தில் படப்பிடிப்பின்போது மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்ட விஜய் ஆண்டனியின் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
ஸ்விச்சர்லாந்தில் மாட்டுத் தொழுவத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுக்கொள்ளும் மகத்தான மனிதர் தன் சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை
சென்னையில் காரில் ஏசி போட்டுக் கொள்ளாதவர் ரஷ்யாவின் -20 டிகிரி குளிரை எங்களுக்காக தாங்கி நடித்ததுதான் பெரியவிஷயம்@vijayantony 🙏🏿 pic.twitter.com/hC4brii5Oh— Naveen Mohamedali (@NaveenFilmmaker) May 15, 2020
What I have done is nothing in front of your hard work and your team’s dedication Naveen😊❤️Pleasure is mine🙏— vijayantony (@vijayantony) May 15, 2020