V4UMEDIA
HomeNewsKollywood'தளபதி விஜய்'யின் ரசிகை ஆகிவிட்டேன் - நடிகை ஆண்ட்ரியா !

‘தளபதி விஜய்’யின் ரசிகை ஆகிவிட்டேன் – நடிகை ஆண்ட்ரியா !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவதாகவும் கூறப்பட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவினால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் ‘மாஸ்டர் திரைப்படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றும் இந்த படத்தில் கார் சேஸிங் காட்சி ஒன்று உள்ளது. அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெறும் மற்றும் நான் தளபதி விஜய் யின் ரசிகை ஆகிவிட்டேன்’ என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments