V4UMEDIA
HomeNewsKollywoodகாட்மேன் வெப் சீரிஸ் வெளியாகது ! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு !

காட்மேன் வெப் சீரிஸ் வெளியாகது ! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு !

பெரும் சர்ச்சையை கிளப்பிய “காட்மேன்” சீரியஸ் ஜீ-5 தளத்தில் வெளியாகாது என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது

சில தினங்களுக்கு முன் “காட்மேன்” வெப் சீரியஸின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் மீது அவதூறு செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இந்தியா முழுவதும் எழுந்தன. இதையடுத்து அந்த சீரியஸ் வெளியாக கூடாது என கண்டனங்கள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக அந்த சீரியஸின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மேல் வழக்குகள் பதியப்பட்டன.

Image 

இந்நிலையில் அந்த சீரியஸ் எங்கள் தளத்தில் வெளியாகாது என ஜீ 5 நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக ‘கருத்து வேறுபாடு காரணமாக தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மதம், சமூகம் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ 5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது’ என அறிவித்துள்ளது.

Image

Most Popular

Recent Comments