சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் 2020ம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளிவந்த ‘சரிலேரு நீக்கெவ்வரு’ படம் உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு.
பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளார் மகேஷ் பாபு.
சர்கருவாரிபாடா (SarkaruVaariPaata) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மித்ரி மூவி மேக்கர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்க தமன் இசையமைக்கிறார்.
போஸ்டரில் மகேஷ்பாபு ஸ்டைலாக முடியை வளர்த்துள்ளார், காதில் கடுக்கன் கழுத்தில் ஒரு ரூபாய் நாணயத்தின் டாட்டூ என அசத்தலாக உள்ளார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் பரசுராம் பெட்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தை இயக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. முதல் நாள் படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.
Here it is!!! #SarkaruVaariPaata💥💥💥 Blockbuster start for another hattrick💥💥💥@ParasuramPetla @GMBents @MythriOfficial @14ReelsPlus @MusicThaman pic.twitter.com/5JOCnPXjpC— Mahesh Babu (@urstrulyMahesh) May 31, 2020