ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் உள்ளிட்ட படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் அவர் கடைசியாக கடந்த 1994 ஆம் ஆண்டு சூப்பர் போலீஸ் மற்றும் நீ மனசு நாக்கு தெலுங்கு என்ற ஒரு தெலுங்கு படத்திற்கு மட்டும்
இசையமைத்தார்.
இந்நிலையில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கவுள்ளார். பிரபாஸ் நடித்து வரும்
20 வது படமான ‘பிரபாஸ் 20’ இசையமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.