லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தளபதி விஜய் யின் பிறந்தநாளான வருகின்ற ஜூன் 22ம் தேதியை ரசிகர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட காத்திருக்கிறார்கள். மேலும் தளபதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காமென் டிபியை வெளியிட்டு உலகளவில் ட்ரெண்ட் செய்தனர். தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் லலித்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார். தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனது பிறந்தநாளை ரசிகர்கள் போஸ்ட்ர் ஒட்டி இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாரும் கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு அன்பு கட்டளை தளபதி விஜய் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advance Birthday wishes to our beloved #Thalapathy @actorvijay sir.. Here is the special poster for #ThalapathyVijay Birthday from our #7ScreenStudio family 😊😊 pic.twitter.com/qKSfWFYo2u
— Lalitkumar (@Lalit_SevenScr) June 18, 2020