இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கால் பதித்து தற்போது நடிகராக வலம் வருகிறார் ஹிப் பாப் ஆதி. 2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஆதி. மீசைய முறுக்கு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடலாசியர், ஆல்பம் ராப் சாங்ஸ் என தமிழ் சினிமாவில் பிஸியாக வலம் வரும் ஆதி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவர்.
கொரோனா ஊரடங்கினால் பள்ளி குழந்தைகளின் படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கின்றனர்.
அந்த வகையில் மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினராக ஹிப் பாப் ஆதி பாடம் எடுத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், “கோபிச்செட்டிப்பாளையம் SVISSS பள்ளி மாணவர்களுக்கு #தமிழி ஆவணப்படம் இணையவழியில் திரையிடப்பட்டதுடன், கலந்துரையாடலும் நடைபெற்றது. கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் சிறப்பு தொடர்பான அறிதலை ஏற்படுத்த வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகத்திற்கு தமிழன்டா இயக்கம் சார்பில் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
#Tamizhi – Virtual seminar by Adhi anna🔥❤️@HiphopTamizha #HiphopTamizha #No1FanofHiphopTamizha pic.twitter.com/xXaWhFMIs2— No.1 Fan of Hiphop Tamizha (@No1FanofHHT) June 15, 2020