குரூப் டேன்சராக தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும், தனது அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பால் இந்தியாவின் தலைசிறந்த நடன இயக்குனராக வளர்ந்தார். இந்தியாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் படங்களுக்கு நடன இயக்குனராக பணிபரிந்துள்ளார். பின் இயக்குனராக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சிக்ஸர் அடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் பெரிய ஹிட் ஆனது. தான் எவளோ சம்பாதித்தாலும் அதில் பெரும்பகுதியை நலத்திட்ட உதவிகளுக்கும், தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கும் கொடுப்பார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்காக நிவாரண நிதி அதிகமாக கொடுத்த நடிகர் லாரன்ஸ். இந்நிலையில் திரு.கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் திரு.ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுள்ளார்.
இந்நிலையில் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அவர்கள் ராகவா லாரன்ஸ் பெற இருக்கும் சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சத்தை 3385 தூய்மை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை பங்கிட்டு கொடுத்துள்ளார்.