இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகரும், பாலிவுட்டில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும் அறியப்படும் நட்டி என்கிற நட்ராஜும் நெருங்கிய நண்பர்கள். அனுராக்கின் ஆரம்பகால படங்களில் நட்டி சம்பளம் பெற்று கொள்ளாமல் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், அனுராக் காஷ்யப் சுயநலவாதி என்றும் தன்னை மறந்துவிட்டார் என்றும் கூறி புகார் தெரிவித்தார். இதையடுத்து அனுராக் காஷ்யப் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ‘நட்டியின் குற்றச்சாட்டுகளைப் படித்தேன். அவர் என் நண்பர் மட்டுமல்ல. என் ஆசிரியரும் கூட. கேமராவை எவ்வாறு எப்படி நகர்த்துவது என எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசான். நட்டி தான் எனக்கு தமிழ் சினிமாக்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இயக்குனர் பாலாவை அறிமுகம் செய்து வைத்தார். கடினமான காலங்களில் ஒன்றாக இருந்தோம். ஆகவே அவர் ஏதாவது கோபமாக பேசுகிறார் என்றால் இரு நண்பர்களுக்கு இடையிலான உரிமையான என்மேல் உள்ள எதிர்பார்ப்பு காரணமாகவே அது வெளிப்பட்டு இருக்கும். அவரது காயம் உண்மையானது. அவருக்கு நான் தேவைப்படும்போது நான் அங்கு இல்லை. எனக்கு இது தெரியவில்லை. ஐ ஆம் சாரி நட்டி’ என கூறியுள்ளார்.
அனுராக்கின் இந்த பதிவுக்கு ‘ நன்றி அனுராக். கடந்த சில நாட்களாக ஊடகங்கள் என்னை மோசமானவனாக சித்திரித்துவிட்டன’ என கூறியுள்ளார்.
Thread 👉🏻 Been reading a lot about @natty_nataraj ‘S outburst being reported in the media . For the record , I want to state here that he is not just my friend but we grew together in cinema . When I did not know how to communicate my shot to my cameraman , he taught me how to ..— Anurag Kashyap (@anuragkashyap72) June 6, 2020