இக்கட்டான சூழ்நிலையில், சமூக ஆர்வலர்கள்,சினிமா பிரபலங்கள் மற்றும் அவர்களது ரசிகர்கள் என தங்களால் முயன்ற நிதியுதவியை அரசாங்கத்துக்கும், ஏழை எளிய மக்களுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் சாலையோரத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை மீட்டெடுத்து மாநகராட்சி மண்டபத்தில் தங்கவைத்துள்ளனர் தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் . அவர்களுக்கு தேவையான உணவு , நீர் ஆகியவற்றை மூன்று முக்கிய அறக்கட்டளைகளுடன் இணைந்து வழங்கி வருகின்றனர் .