V4UMEDIA
HomeNewsBollywood6 மொழியில் ரிலீஸாகும் விஜய் சேதுபதி யின் "காந்தி டாக்ஸ்" !!

6 மொழியில் ரிலீஸாகும் விஜய் சேதுபதி யின் “காந்தி டாக்ஸ்” !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவரை மக்கள் செல்வன் என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.

சமீபத்தில் தளபதி விஜய் யுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. பவானி கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 17) தனது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடுகிறார் விஜய் சேதுபதி.

Image

விஜய் சேதுபதி நடிக்க உள்ள புதிய படமான காந்தி டாக்ஸின் போஸ்டர் இன்று பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தனது கைவசம் இப்போது 10 படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம்.

 இந்நிலையில் இப்போது அவர் 6 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் “காந்தி டாக்ஸ” எனும் படத்தில் நடிக்கவுள்ளார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Previous article
Next article

Most Popular

Recent Comments